இன்று 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. தமிழக அரசு ஏற்பாடு.!

இன்று 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. தமிழக அரசு ஏற்பாடு.!

Update: 2021-01-02 07:48 GMT

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் இன்று ஜனவரி 2ம் தேதி கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும் என்று  சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள, 100 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா தீவிர சிகிச்சை பிரிவை, அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில்: தமிழகத்தில் மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணியை, உலக சுகாதாரநிறுவனம் பாராட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை இன்று முதல் சென்னை, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 17 இடங்களில் நடைபெறுகிறது.

இதற்காக 47 ஆயிரத்து 200 கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 21 ஆயிரத்து 170 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 மணி நேரத்தில் 25 நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
 

Similar News