தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி குறித்து தேவையில்லாத வதந்திகளை சில அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர் மன்சூர்அலிகான் உள்ளிட்டோர் பரப்பி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி குறித்து தேவையில்லாத வதந்திகளை சில அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர் மன்சூர்அலிகான் உள்ளிட்டோர் பரப்பி வருகின்றனர். உயிர்காக்குவதற்காகத்தான் தடுப்பூசியை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். ஆனால் அதனை கொச்சைப்படுத்தும்விதமாக சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர், ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 55.8 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதில் தற்போதுவரை 47.05 லட்சம் டோஸ் மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 8.8 லட்சம் டோஸ் மருந்துகள் கையிருப்பில் உள்ளது. எனவே பொது மக்கள், தடுப்பூசி பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.