மருத்துவருக்கு கொரோனா! அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்!

அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-11 12:31 GMT

அரசு மருத்துவர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், மருத்துவனைப் பணியாளர் என்று மொத்தம் 4 பேருக்கு இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கையாக அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர்கள் மற்றும் செவலியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான பணியாளர்கள் மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamani


Tags:    

Similar News