ஆள் குறைப்பு நடவடிக்கையில் பன்னாட்டு நிறுவனங்கள்... இந்தியர்களின் நிலைமை என்ன..?
மெட்டா நிறுவனத்தின் மூன்றாவது முறையாக 4000 ஊழியர்கள் அதிர்ச்சியாக பணி நீக்கம்.
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என்று அழைக்கப்படும் மெட்டான் நிறுவனம் பல்வேறு பொருளாதார சுமைகள் காரணமாக தங்களுடைய செலவுகளை குறைக்கும் நோக்கில் களமிறங்கி இருக்கிறது. குறிப்பாக கொரோனா நோய் தொற்று மற்றும் உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆள் குறைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆள் குறைப்பு நடவடிக்கைகளும் மூலமாக தங்களுடைய செலவு சிறிது குறையும் என்ற நிறுவனங்கள் எண்ணுகிறது.
அந்த வகையில் மைக்ரோசாப்ட், கூகுள், ட்விட்டர், பேஸ்புக், டிஸ்னி, அமேசான் போன்ற பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் ஆள் கறிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறது. இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தையும் தாண்டி இருக்கிறது. Facebook தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 11 ஆயிரம் ஊழியர்களை திடீரென்று பணி நீக்கம் செய்தது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பத்தாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.தற்பொழுது தொடர்ந்து மூன்றாவது முறையாக 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த ஒரு தகவல் காரணமாக மெட்டா ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
Input & Image courtesy: Zee News