ஊழல் காங்கிரஸ் கட்சியில் இணையும் ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரி(முன்னாள்) சசிகாந்த் செந்தில்!

ஊழல் காங்கிரஸ் கட்சியில் இணையும் ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரி(முன்னாள்) சசிகாந்த் செந்தில்!

Update: 2020-11-08 16:08 GMT

2009-ஆம் ஆண்டு இந்திய குடியியல் பணிகள் தேர்வில் வெற்றிப் பெற்றார் சசிகாந்த் செந்தில். இவர் பிறகு, கர்நாடகா மாநிலத்தில் துணை ஆட்சியர், ஆட்சியர் என பொறுப்புக்களை வகித்து வந்தார். இதனிடையே திடீரென 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு அவர் பல்வேறு போராளி காரணங்கள் தெரிவித்தாலும், அவர் மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே அவசர அவசரமாக ராஜினாமா செய்தார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் அவர் நாளை காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக தனது ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.

சசிகாந்த் செந்தில் ஒரு ஊழல் பேர்வழி என்றும் அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடகா மாநில மங்களூர் பகுதி கூட்டு நடவடிக்கைக் குழு 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டனர். இக்கூட்டு நடவடிக்கை குழு என்பது அப்பகுதியின் மணல் ஒப்பந்தக்காரர்கள், மணல் படகு உரிமையாளர் - தொழிலாளர்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் தக்‌ஷின் கன்னடா மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவாகும்.

கர்நாடகத்தில் இயங்கும் உதயவாணி பத்திரிக்கையில் 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான் இந்த செய்தியின் படி தக்‌ஷின் கன்னடா மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் ஷெட்டி சசிகாந்த் செந்தில் மீது அடிக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். செந்தில் தனது பதவிக் காலத்தில் மணல் கொள்ளையை தொய்வின்றி செய்ய பல மாபியாக்களை உருவாக்கி வைந்திருந்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் மீன்பிடித் துறைமுகத்தை அகழ்வாராய்ச்சி மூலம் சேகரிக்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் கழிவுகளை விட முன்னாள் டி.சி முறைகேடுகளை செய்ததாகவும் செந்தில் கூறினார் என விளாசி உள்ளார். இதுபோக பல்வேறு குற்றச்சாட்டுகள் கர்நாடகத்தில் இவர் மீது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் 2ஜி ஊழல், காமன்வெல்த் ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என புகழ்பெற்ற காங்கிரஸ் கட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சசிகாந்த் செந்தில் சேர இருப்பது தமிழர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Similar News