கோவில் பணியாளர் நியமனத்தில் ஊழல்.? போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் நீக்கம்.!

கோவில் பணியாளர் நியமனத்தில் ஊழல்.? போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர் நீக்கம்.!

Update: 2020-12-02 07:20 GMT

அறநிலையத்துறை பணியிடங்களில் தான் ஊழல் நடக்கிறது என்றால் கோவில் பணியாளர்களை நியமிப்பதிலும் குளறுபடிகளும் ஊழலும் நடப்பதாகத் தெரிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பணிபுரிய சேவைகள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இவர்கள் பள்ளிகளை வழங்கப்பட்ட கல்வி சான்றிதழின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்து நியமிக்கப்பட்டவர்கள் காமாட்சி என்ற பெண் ஊழியர் கொடுத்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்று கோவில் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையானது தானா என்று அறிய விசாரணை நடத்தப்பட்ட போது காமாட்சி அளித்த பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. 

இதையடுத்து அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் மேலும் பலர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. விசாரணையில் சந்தேகம் நிரூபணமான நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை கண்டறிய காமாட்சிக்கு பணி நியமனம் வழங்கப்பட்ட போது பணியில் சேர்ந்தவர்களின் கல்வி சான்றிதழின் உண்மைத் தன்மையை ஆராய கோவில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆய்வின் முதல் கட்டமாக கோவில் பணியாளர்களின் பள்ளிச் சான்றிதழ்கள் உண்மையானவை தானா என்று சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கேள்வி எழுப்பி கோவில் நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கோவில் திருப்பணி குழுவில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் அரசியல்வாதிகளால் பரிந்துரை செய்யப்படுபவர்களும் பணியமர்த்தப்படுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News