இப்படி மோசமா ரோடு போட்டு அதில் கூடவா ஊழல் பண்ணுவீங்க? - தி.மு.க அரசை கேள்வி கேட்கும் அண்ணாமலை

தரமற்ற சாலைகள் மக்களுக்கு போட்டு ஊழலில் கொழிக்கும் தி.மு.கவை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணமலை கடுமையாகக் கண்டிக்கிறார்.

Update: 2022-08-19 08:47 GMT

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் பகுதியில் புதியதாக சாலை அமைக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், குட்டூர் கிராம மலைவாழ் மக்களுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. ஏனெனில் தற்போது இந்த கிராமத்திற்கான சாலை மத்திய மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய அரசு இத்தகைய கிராமத்திற்கான சாலையை மேம்படுத்துவதற்கான வழங்கிய தொகையை தற்போது தி.மு.க ஊழலில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. தரமான சாலைகளுக்கு பதிலாக ஒரே நாளில் கையுடன் வரும் சாலைகளில் தி.மு.கவினர் போட்டுள்ளார்கள். 


35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற இந்த சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இத்தகைய செயல்கள் மக்கள் மனதை காயப்படுத்திகின்றன. பிரதம மந்திரி கிராமப்புற சாலை திட்டத்தில் தமிழகத்திற்கு நமது மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் 2269 கோடி ரூபாய் நிதியாக வழங்கியுள்ளது. 


மேலும் இது குறித்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் கூறுகையில், "தரமற்ற சாலைகளைப் போட்டு, ஊழலில் கொழிக்கும் இந்த தி.மு.க அரசு, மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை தமிழக பா.ஜ.க வன்மையாகக் கண்டிக்கிறது. விரைவில் மக்களுக்கு நல்லாட்சி மலரும் என்பதை எதிர்பார்த்து இருக்கிறோம்" என்று அவர் கூறியிருக்கிறார். 

Input & Image courtesy: Twitter post

Tags:    

Similar News