குற்றாலத்தில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு.!
குற்றாலத்தில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிப்பு.!
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு தொடருவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. யாரும் செல்லாமல் இருப்பதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளியூர்களில் இருந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். குற்றாலத்தில் வெள்ளப்பபெருக்கு குறைந்த பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.