கோவையில் சிமெண்ட் ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது.!
கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்பட்டு வந்த சிமென்ட் ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கோவை மாவட்டம் மதுக்கரையில் செயல்பட்டு வந்த சிமென்ட் ஆலைக்கு சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
கோவை, மதுக்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஏசிசி சிமென்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று அந்த தொழிற்சாலைக்கு சரக்கு ஏற்றி வந்த ரயில் தடுப்புகளை உடைத்துகொண்டு மயில்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் தடம் புரண்டது.
கடந்த வாரமும் ரயில் தடம் புரண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தும் சரக்கு ரயிலால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே மீண்டும் விபத்து ஏற்படாதவாறு சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.