கோவை: சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் சையத் காஜா மைதீன் பணியில் இருந்து விடுவிப்பு !

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சியில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் மீது ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.;

Update: 2021-08-19 07:09 GMT
கோவை: சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் சையத் காஜா மைதீன் பணியில் இருந்து விடுவிப்பு !

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சியில், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் மீது ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று ஊராட்சி அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றவில்லை. மேலும், வார்டு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுவிக்கவில்லை என ஆட்சியர் மற்றும் பி.டி.ஓ அலுவலகத்தில் ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சியின் 1வது வார்டு கவுன்சிலர் ராமசாமி புகார் அளித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றாத ஊராட்சி செயலர் சையத் காஜா மைதீன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜாகீர்நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு, புதிய ஊராட்சி செயலராக பரமேஸ்வரி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Source: Dinamalar


Tags:    

Similar News