கோவை: ஓட்டலில் அத்துமீறிய எஸ்.ஐ. முத்து பணியிடை நீக்கம்.!
ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முத்து, முதலில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பின்னர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டார்.
கோவை காந்திபுரம், பேருந்து நிலையம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.20 மணியளவில் ஓட்டலுக்கு திடீரென்று புகுந்த எஸ்.ஐ., முத்து சாப்பிட்டு கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் மீது சராமாரியாக தாக்கினார். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷ்னர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முத்து, முதலில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பின்னர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டார்.
மேலும், உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக எஸ்.ஐ. முத்து தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களிடம் போலீசார் நடவடிக்கை எடுத்தாலே போதுமானது. சாப்பிடுபவர்கள் மீது தங்களின் அதிகாரங்களை காண்பிப்பது சரியில்லை. இனிமேலாவது இது போன்ற போலீசார் மீது உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் கருத்தாகும்.