கோவை: கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு !
கோவையில் கோயிலுக்கு சொந்தமான சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவையில் கோயிலுக்கு சொந்தமான சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை, சின்ன தடாகம் பகுதியில் உள்ள மாரியம்மன், அங்காளம்மன் கோயில்களுக்கு சொந்தமாக 8.8 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக தென்னரசு, ரங்கராஜ் ஆகியோர் தற்காலிகக் கூடாரம் அமைத்து நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னர் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையிலும், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நிலம் மீட்கப்பட்டுள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: Puthiyathalaimurai
https://www.puthiyathalaimurai.com/newsview/112757/In-Coimbatore-land-worth-about-Rs-6-crore-belonging-to-the-temple-has-been-recovered