கவனக்குறைவு கொரோனா 3வது அலையை ஏற்படுத்தும்: மாநகராட்சி ஆணையர் தகவல் !

தற்போது உள்ள காலகட்டங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்யும் சென்னை மாநகராட்சி ஆணையர்.

Update: 2021-08-02 13:25 GMT

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்போது கொரோனா காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் தற்பொழுது கவனக்குறைவாக செயல்படுகிறார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக கூட்டம் கூடும் இடங்களில் அதிகமாக பயணம் செய்வது மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது சரியான விதத்தில் முக கவசம் அணியாதது போன்றவை காரணமாக இருக்கிறது. எனவே மக்கள் இவ்வாறு கவனக்குறைவாக செயல்பட்டால் வர இருக்கும் அலையை நம்மால் தடுக்க இயலாது சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். 


இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பொதுமக்கள் கவனக் குறைவாக இருந்தால் கொரோனா 3வது அலை வரும். எனவே மக்கள் எச்சரிக்கையுடனும் கவனமுடன் இருக்க வேண்டும். புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு வந்த காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டும் மக்கள் வீட்டை விட்டு வௌியே வர வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் 9 இடங்களில் வணிக பகுதிகள் மூடப்பட்டுள்ளன.


மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலமாக தான் வைரஸ் தொற்றினை  தொடர்ந்து எதிர்க்க முடியும் எனவே முடிந்தவரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு தேவைப்படும் பட்சத்தில் மட்டும்தான் வெளியிடங்களுக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளில் சமூக இடைவெளியின்றி அருகருகே சாப்பிடக்கூடாது. விஷேச நாள்களில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே வழிபாடு செய்ய வேண்டும்" என்று அவர் கூறினார். 

Input: https://www.newindianexpress.com/cities/chennai/2021/aug/02/rise-in-covid-19-cases-keeps-chennai-on-edge-2338829.html 

Image courtesy: Indian Express news 


Tags:    

Similar News