தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதா?

7 மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு. மூன்றாம் அலை துவங்கியுள்ளதாக மக்கள் அச்சம்.

Update: 2021-08-14 14:19 GMT

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது இரண்டாம் அலையின் தாக்கம் பெருமளவில் குறைய தொடங்கி உள்ளது. இருந்தாலும் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வரும் ஒரு சூழ்நிலையை வைத்து பார்க்கும் பொழுதபொழுத, தற்போது தமிழகத்தில் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதா? என்பது போன்ற செய்திகள் அதிகமாகக் பரப்பப்பட்டு வருகின்றன.  


தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 1,900-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக சராசரி பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது. இந்த நிலையில், ஒரே நாளில் மட்டும் 1,933 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,84,969ஆக அதிகரித்துள்ளது.


அதிகபட்சமாக, கோவை மாவட்டத்தில் இன்று 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, ஈரோட்டு, சே. . லம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் இன்று 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,462 ஆக உயர்ந்துள்ளது. எனவே பாதிப்புகளில் எண்ணிக்கையை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். 

Input:https://m.timesofindia.com/city/chennai/tamil-nadu-17-districts-report-increase-in-covid-19-cases-34-new deaths 

Image courtesy:times of India 



Tags:    

Similar News