தமிழகத்திற்கு இன்று 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் வருகை.!

தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. குறிப்பாக, கடந்த 10ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை 14 லட்சத்து 92 ஆயிரத்து 930 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

Update: 2021-06-17 03:48 GMT

தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மனிதர்களை காப்பதற்கு சிறந்த ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்திருந்தார். அதன்படி தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தியுள்ளது.




 


இந்நிலையில், தமிழகத்திற்கு இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 18 ஆயிரத்து 890 தடுப்பூசிகள் வந்துள்ளன. குறிப்பாக, கடந்த 10ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை 14 லட்சத்து 92 ஆயிரத்து 930 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன.


 



இந்நிலையில், தமிழகத்திற்கு இன்று மேலும் 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி டோஸ்கள் வந்துள்ளது. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News