திருப்பரங்குன்றம் மாயாண்டி கோவிலுக்கு கறவை மாடு வழங்கிய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா.!

கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து அவர் கோவில்களில் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.

Update: 2021-04-24 07:13 GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அப்போது தேர்தலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து அவர் கோவில்களில் சென்று வழிபாடு நடத்தி வருகிறார்.


 



அதன்படி நேற்று மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, திருப்பரங்குன்றத்தில் உள்ள மாயாண்டி கோவிலில் வழிபாடு நடத்திய அவர், கறவை மாடு ஒன்றையும் வழங்கினார். 

Similar News