பயிர்க்கடன் தள்ளுபடி: மாநில கூட்டுறவு வங்கி மேலாளரிடம் பதிவாளர் ஆலோசனை.!

பயிர்க்கடன் தள்ளுபடி: மாநில கூட்டுறவு வங்கி மேலாளரிடம் பதிவாளர் ஆலோசனை.!;

Update: 2021-02-06 12:14 GMT

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில் விவசாயிகள் பெற்ற 12,110 கோடி கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்வதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கான அரசாணையையும் உடனே வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வருகின்ற நிதிநிலை அறிக்கையிலேயே ஏற்படுத்தப்படும் என கூறினார்.
முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து விவசாயிகளின் கடன் விவரங்கள் மற்றும் பெயர்களை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் பயிர்க்கடன் தொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் இன்று ஆ லோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கூட்டுறவு வங்கி மேலாளர்கள் மற்றும் பதிவாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News