பயிர் கடன் தள்ளுபடி: விவசாயிகளின் பட்டியலை தயார் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு.!
பயிர் கடன் தள்ளுபடி: விவசாயிகளின் பட்டியலை தயார் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு.!;
தமிழக கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் வாங்கிய விவசாயிகளின் பட்டியலை தயார் செய்யும்படி கூட்டுறவு சங்க பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று மற்றும் அடுத்தடுத்த 2 புயல்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை அறிவித்தார். அதாவது ரூ.12,110 கோடி கூட்டுறவு வங்கியில் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுதாக சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலமாக 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார். அதன் படி கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணை தமிழக கெஜட்டில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், விவசாய கடன் தள்ளுபடியில் பயன்பெறும் தகுதியான விவசாயிகளின் பட்டியலை தயார் செய்ய வேளாண் அதிகாரிகளுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றரிக்கை அனுப்பியுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக விவசாயிகள் வாங்கிய ரசீதுகள் வங்கிகளில் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் விவசாயிகளுக்கு தமிழக கூட்டுறவு வங்கிகளில் இருந்து கடிதம் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.