'கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி' என்ற வாசகத்துடன் தமிழகம் முழுவதும் கொடி கம்பங்கள் - இந்து முன்னணியின் அதிரடி திட்டம்
'கடவுள் இருக்கிறார்' என்ற வாசகத்துடன் கொடி கம்பங்கள் அமைக்க இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
'கடவுள் இருக்கிறார்' என்ற வாசகத்துடன் கொடி கம்பங்கள் அமைக்க இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
ஈ.வே.ராமசாமி சிலைகளுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களுக்கு பதிலடியாக, 'கடவுள் இருக்கிறார், கடவுளை வணங்காதவன் முட்டாள், கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி, கடவுளை வணங்காதவன் அயோக்கியன்' என்ற வாசகங்களுடன் தமிழகம் முழுவதும் கம்பங்களை அமைக்க இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த 1994 சென்னை கோமளீஸ்வரன் பேட்டையில் 'கடவுள் இருக்கிறார், கடவுளை வணங்காதவன் முட்டாள்' போன்ற வாசகங்களுடன் இந்து முன்னணி கொடி கம்பத்தை ராம கோபாலன் திறந்து வைத்தார். அதை பின்பற்றி தமிழக முழுவதும் இந்து முன்னணி கொடி கம்பங்களை அமைக்கப்படும் என்றார்.