கிரிப்டோ கரன்சிகளின் முதலீட்டு... 9 லட்சம் மோசடி... எச்சரிக்கை அறிவிப்பு!

கிரிப்டோ கரன்சிகளின் முதலீட்டு செய்தலில் ஒன்பது லட்சம் மோசடி.

Update: 2023-04-18 02:16 GMT

கோவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து இருக்கிறார். குறிப்பாக கோவை கணபதி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி. இவர் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அதில் கிரிப்டோகரன்சிகளில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தால் அதிகமாக பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனை நம்பிய அவர் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தார், தினமும் குறிப்பிட வங்கிகளில் முதலீட்டு தொகைக்கு ஏற்ற லாபம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.


இதனை தொடர்ந்து அவர் அதில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் முதற்கட்டமாக 18,000 முதலீடு செய்தார் . அதனை தொடர்ந்து அவருக்கு லாபமாக 24 ஆயிரத்து 350 கிடைத்ததாக குறுஞ்செய்தி வந்தது. பின்னர் அவருக்கு சொந்தமான வங்கி கணக்கில் 2 லட்சம் சிறிது சிறிதாக சேர்த்த மொத்தம் ஒன்பது லட்சத்து பதினோரு 600 முதலீடு செய்தார். இந்த தொகைக்கு கமிஷன் தொகையாக 13 லட்சத்து 81,600 கிடைத்ததாக மோசடியாக தவறான குறுஞ்செய்து வந்தது. இந்த தொகையை அவர் வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார்.


ஆனால் அப்போது அவரால் முடியவில்லை, அப்போதுதான் மோசடி செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை அறிந்தால் அதனை தொடர்ந்து மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசாரிடம் வழக்கு ஒன்றே பதிவு செய்து இருக்கிறார். மேலும் போலியான லிங்கை அனுப்பிய இவரிடம் இருந்து ஒன்பது லட்சத்து 11 ஆயிரம் மோசடி செய்து இருக்கிறார்கள். அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News