கடலூர்: அங்கன்வாடியில் பல்லி விழுந்த சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!

இன்று மதியம் அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Update: 2021-09-20 12:45 GMT

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் அருகே அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் அருகே உள்ளது பூதங்கட்டி கிராமம். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

இன்று மதியம் அங்கன்வாடி மையத்தில் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்துள்ள நிலையில், பணியாளரின் அலட்சியமாக செயல்பட்டாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தொடர்ந்து கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News