பெரம்பலூரில் ஆகஸ்ட் 10ம் தேதி வரை ஊரடங்கு.. ஆட்சியர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி !
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஊரடங்கை அமல்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
பெரம்பலூரில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற இடங்களில் மீண்டும் ஊரடங்கு அமலாகிறது. நாளை (4ம் தேதி) முதல் 10ம் தேதி வரை இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஊரடங்கை அமல்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் பேரூராட்சி, லப்பைகுடிகாடு பேரூராட்சி பகுதிகளில் வரும் 4ம் தேதி முதல் 10ம் தேதிவரை 7 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்ரியா அறிவித்துள்ளார்.
பெரம்பலூரில் உள்ள சிவன்கோயில் முதல் வானொலி திடல் வரை, வானொலி திடல் முதல் பழையபேருந்து நிலையம் வரை, பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு உள்ளிட்ட 7 இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் பால், காய்கறி கடை, மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கும். மற்ற வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கடைகளை மாலை வரை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy: IndiaToday
https://www.puthiyathalaimurai.com/newsview/111658/Curfew-in-Perambalur-from-tomorrow-till-August-10--District-Collector-s-announcement