ஒருவாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-06-20 07:36 GMT

தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. இதனையடுத்து கடந்த ஜூன் 7ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, காய்கறி மற்றும் மளிகை கடைகள், சலூன் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.




 


இந்நிலையில், நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 28ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று குறைவாக உள்ள 22 மாவட்டங்களில் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News