கன்னியாகுமரியில் அதிர்ச்சி: ஊழலை தட்டிக்கேட்ட அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல்!

Update: 2022-03-06 12:52 GMT

உயர் அதிகாரிகள் அநீதிக்கு துணை போகாமல் மிக நேர்மையாக பணியாற்றுவதால் தனக்கும் தனது குழந்தைக்கும் உயர் அதிகாரிகள் கொலை மிரட்டல் விடுப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் பெமிலா. இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு வகையில் ஊழல்கள் நடைபெறுகிறது. இதற்கு மிகவும் முக்கிய காரணம் நாகர்கோவில் சுகாதார பணிகள் முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் என்பவர் குறிப்பிட்டார். அவர் 10 ஆண்டுகளாக அரசு விதிக்கு மாறாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரது சொல் பேச்சை கேட்பவர்களை மருத்துவ அலுவலர்களை நியமித்து அதன் மூலம் ஊழல் செய்துள்ளார். மக்களின் வரிப்பணத்தில் வருகின்ற நிதியை போலி ஆவணங்களை தயார் செய்து கையாடல் செய்துள்ளனர். மருத்துவமனைக்கு வராமலேயே வரிப்பணத்தில் சம்பளம் பெற்றார். அது மட்டுமின்றி மருத்துவ துறையில் பல மோசடிகளை செய்துள்ளார்.

அவரது அநீதிக்கு துணை போகாத தன்னை பெண் மருத்துவர் என்றும் பாராமல் பணி செய்ய விடாமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அது மட்டுமின்றி எனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சியில் இது போன்ற அநியாயங்களை தட்டிக்கேட்க வேண்டும். என்று கதறியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: News 7 Tamil

Tags:    

Similar News