கடன் தள்ளுபடி: தஞ்சை ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த விவசாயிகள்.!

கடன் தள்ளுபடி: தஞ்சை ஆட்சியருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்த விவசாயிகள்.!;

Update: 2021-02-10 13:26 GMT

தமிழக கூட்டுறவு வங்கிகளில் எடுத்த விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்துமே தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அது மட்டுமின்றி 15 நாட்களில் விவசாயிகளுக்கு ரசீது சென்றடையும் எனவும் அவர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தஞ்சை ஆட்சியருக்கு விவசாயிகள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது ஆட்சியர் கோவிந்த ராவுக்கு விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் இனிப்புகளை கொடுத்தனர். அதனை ஆட்சியர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். தமிழகம் முழுவதும் இதே மனநிலையில் தான் விவசாயிகள் உள்ளனர். கடன்களை தள்ளுபடி செய்தது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News