டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.!
தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழையால் சற்று வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
இதனிடையே, தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர், தென்தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும்.
அதே போன்று நாளை முதல் 16ம் தேதி வரை பல மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.