தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ்: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்.!

இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது என கூறினார். இதனை அரசு கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார்.

Update: 2021-06-25 12:37 GMT

தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. டெல்டா திரிபாக பரவிவந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் டெல்டா பிளஸாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மே மாதம் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைக்காக எடுக்கப்பட்ட 1,159 மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.


 



இதனிடையே, இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது என கூறினார். இதனை அரசு கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனக் கூறினார்.

இந்நிலையில், தமிழகத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் இருந்து தகவலை வெளியிட்டுள்ளது. தமிழக அமைச்சர் கூறும்போது 3 பேருக்கு மட்டும்தான் டெல்டா பிளஸ் இருக்கிறது என கூறியுள்ள நிலையில் தற்போது 9 பேருக்கு இருப்பது பொதுமக்களிடடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




 


ஒரு உண்மை நிலையை தமிழக அரசு மறைக்கிறதா என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உண்மை நிலையை வெளியிடுவதில் என்ன சிக்கல் உள்ளது அரசுக்கு என்பது புரியாத புதிராக உள்ளது.

Similar News