அரசு பள்ளியில் கோவில் இடம் இடிப்பு: இருதரப்பினருக்கு இடையில் வாக்குவாதம்!
அரசு பள்ளியில் உள்ள கோவில் இடத்தில் இருப்பதால் ஏற்பட்ட வாக்குவாத பிரச்சனை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பள்ளியில் உள்ள கோவில் இடத்தை இடிப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நாட்டறம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி துவங்குவதற்கு முன்பு சுமார் 44 வருடங்களுக்கு முன்பு 1978 ஆம் ஆண்டு இந்து தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏவாக இருந்த திம்மராய கவுண்டர் கோவில் கட்டுவதற்கு இடத்தை ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.
ஆனால் அப்போதே சூழ்நிலையில் இப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள கோவிலை இடித்துவிட்டு இதை கட்டலாம் என்று கூறியதால் ஏற்பட்ட பிரச்சனைகள் அந்த இடம் தற்பொழுது அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் மாறி இருக்கிறது. கோவில் அருகே சுற்றுசூவர் எழுப்பப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் பாதையில் நின்ற கோவில் பணிகள் தற்போது வரை முடிக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென்று நேற்று இந்த பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோவில் கட்டுவதற்காக இங்கு உள்ள கருங்கற்களை எடுத்து டிராக்டரில் எடுத்து சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பொது மக்களுக்கும் அந்த நபர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டதால் கோவில் இடத்தை எடுக்க வேண்டாம் என்று கூறியதன் பெயரில் கோவில் இடிக்காமல் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Thanthi News