கோயில்களை இடிப்பதுதான் அரசின் குறிக்கோளா? கோவை சூலூரில் மீண்டும் ஒரு கோயில் இடிப்பு!

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பின்னர் இந்துக்களின் கோயில்கள் மட்டும் குறிவைத்து இடிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள வாசுதேவர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-20 03:57 GMT

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பின்னர் இந்துக்களின் கோயில்கள் மட்டும் குறிவைத்து இடிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று மீண்டும் ஒரு சம்பவம் கோவை மாவட்டம், சூலூரில் உள்ள வாசுதேவர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களாக திமுக ஆட்சியில் இருந்த வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்துக்கள் கோயில்கள் மட்டும் திட்டமிடப்பட்டு இடிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. தி.மு.க., தி.க.வில் இருப்பவர்கள் கோயில்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை எப்போதும் முன்வைத்து வருகின்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவை அனைத்தும் உண்மையாக நிறைவேற்றப்படும் நிலையில் இருப்பதாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் பட்டணம் பகுதியில் வாசுதேவர் கோயில் கட்டப்பட்டிருந்தது. இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். தற்போது இந்த கோயிலை திமுக அரசு திடீரென்று ஜேசிபி இயந்திரத்தை வைத்து இடித்து தள்ளியுள்ளது. இதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காமல் இடித்து தள்ளியிருப்பது இந்து விரோத அரசாக திமுக இருக்கிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுவரை திமுக அரசு 158 கோயில்களை இடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: சிம்ப்ளிஸிட்டி, Coimbatore

Tags:    

Similar News