திருச்சியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: 37 பேர் பாதிப்பு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 37 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா கூறியுள்ளார்.

Update: 2021-10-12 12:14 GMT

திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 37 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் வேகம் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 342 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பதாக டாக்டர் வனிதா கூறியுள்ளார். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு என்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரத்யேக வார்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரத்யேக வார்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் வனிதா கூறியுள்ளார்.

Source: Dinakaran

Image Courtesy:India Today

Tags:    

Similar News