சாலையில் போலீசாருடன் வாக்குவாதம்.. பெண் வழக்கறிஞருக்கு முன்ஜாமின் மறுப்பு.!
தங்களை கைது செய்யக்கூடாது என்று வழக்கறிஞர் தனுஜா மற்றும் மகள் ப்ரீத்தி இரண்டு பேரும் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.அங்கு அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின்கோரி மனுதாக்கல் செய்தனர்.
சாலையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, சேத்துப்பட்டில் போலீசாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அவருக்கு பலர் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை காவலர் ரஜித்குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கறிஞர் தனுஜா ராஜன், அவருடைய மகள் ப்ரீத்தி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தங்களை கைது செய்யக்கூடாது என்று வழக்கறிஞர் தனுஜா மற்றும் மகள் ப்ரீத்தி இரண்டு பேரும் முன்ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.அங்கு அவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின்கோரி மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அவரது மகள் பிரீத்திக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.