தமிழகத்தில் இடி, மின்னலால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம்.!

தேசிய மற்றும் மாநில பேரிடர் அமைப்புகள் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2021-07-22 04:14 GMT

தமிழகத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் உயிரிழப்பவர்களை விட இடி, மற்றும் மின்னல் தாக்குதலில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும், கிராமப்புறங்களில் இறப்பு வீதம் அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் கிராமங்களில் இடி, மின்னலால் உயிரிழப்பவர்களின் நிலை குறித்து கவனம் செலுத்தப்படாமல் உள்ளது. நகர்ப்பகுதிகளில் அலைபேசி கோபுரங்களில் இடிதாங்கிகள் பொறுத்தப்பட்டிருப்பதால் இறப்புகள் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன.


தேசிய மற்றும் மாநில பேரிடர் அமைப்புகள் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

அறிவியல் தொழில்நுட்பம் மூலம் இடி, மின்னல் உணர்கருவிகளைப் பயன்படுத்தி முன்னரே மழை எச்சரிக்கை விடுக்கின்றனர். டாமினி, டி.என்.ஸ்மார்ட், நவ் காஸ்ட் போன்ற பல செயலிகளும் வானிலை நிலவரம் குறித்து அறிய உதவுகிறது. வளிமண்டல மேலடுக்கின் நிலை குறித்து அறிய கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும், முன்னறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு போன்ற பல வழிகளில் பேரிடர் உயிரிழப்பு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதிகமான ரேடார்கள் பழுதாகியிருப்பதாகவும் அதனை சரி செய்து, அதன் எண்ணிக்கைகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Similar News