தருமபுரி அருகே அதிகாலையில் தடம் புரண்ட விரைவு ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தருமபுரி அருகே பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்ட நிலையில், நல்ல வேலையாக அனைத்து பயணிகளும் உயிர் சேதமின்றி தப்பியுள்ளனர்.;

Update: 2021-11-12 04:49 GMT
தருமபுரி அருகே அதிகாலையில் தடம் புரண்ட விரைவு ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

தருமபுரி அருகே பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்ட நிலையில், நல்ல வேலையாக அனைத்து பயணிகளும் உயிர் சேதமின்றி தப்பியுள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலிருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த விரைவு ரயில் அதிகாலை சுமார் 3.30 மணியளவில் தருமபுரி வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் சேலத்திலிருந்து தருமபுரி இடையிலான வனப்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் அருகாமையில் இருந்த கற்கள் உரசியதால் இன்ஜின் மற்றும் அதற்கு அடுத்துள்ள 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர்தப்பினர். தடம் புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Social Media


Tags:    

Similar News