தருமபுரி: இன்று 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.!

தருமபுரி மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-22 13:46 GMT

தருமபுரி மாவட்டத்தில் இன்று 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




 


தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.


 



இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தருமபுரியில் இன்று (ஏப்ரல் 22) 86 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 89 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மொத்த பாதிப்பு 8,154 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,236 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 857 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழப்பு 61 ஆக உயர்ந்துள்ளது.

Similar News