தருமபுரியில் ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா உறுதி.!
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,698 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் நேற்று (6ம் தேதி) ஒரே நாளில் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஒரு புறம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 6,864 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,698 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மொத்தம் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.