தருமபுரியில் தடுப்பூசி திருவிழா: மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தொடங்கி வைப்பு.!
பெருகி வரும் கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் மோடி தடுப்பூசி திருவிழாவை நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. இதற்காக மாவட்டம்தோறும் சிறப்பு முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் முககவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பெருகி வரும் கொரோனா தொற்றை தடுக்க பிரதமர் மோடி தடுப்பூசி திருவிழாவை நடத்துவதற்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தடுப்பூசி திருவிழாவை மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா தொடங்கி வைத்தார். இதில் 45 வயதுக்கு மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.