தருமபுரி அருகே மின்வாரிய அலுவலகம் இடமாற்றத்தை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை.!

தருமபுரி மாவட்டம், இண்டூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த மின்வாரிய அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Update: 2021-03-17 04:37 GMT

தருமபுரி மாவட்டம், இண்டூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த மின்வாரிய அலுவலகத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தருமபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் இண்டூர் உள்ளது. அங்கு காவல்நிலையம், மின்சார வாரியம் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையில் மற்றும் கால்நடை மருத்துவமனை, ஆர்.ஐ. அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகுறது.




 


நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட 16 பஞ்சாயத்துகளுக்கு இண்டூர்தான் முக்கிய டவுனாக உள்ளது. அதே போன்று இண்டூரில் இயங்கி வரும் மின்சார வாரிய அலுவலகத்தை அதகப்பாடிக்கு மாற்றப்படுவதாக பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து 100க்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வாரிய இடமாற்றத்தை கண்டித்து பொபதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தகவல் அறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Similar News