தருமபுரி: எர்ரபையனஅள்ளி ஊராட்சி, தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம்!
தருமபுரி மாவட்டம், எர்ரபையன அள்ளியில் விநாயகா மிஷன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் எர்ரபையன அள்ளி ஊராட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், எர்ரபையன அள்ளியில் விநாயகா மிஷன் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை மற்றும் எர்ரபையன அள்ளி ஊராட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட எர்ரபையன அள்ளி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் இளம் வயதுடையவரான சிலம்பரசன் தலைவராக உள்ளார். இவர் தனது ஊராட்சிகுட்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் தன்னால் முடிந்தவைகளை செய்து வருகிறார். அந்த வகையில் இன்று இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதற்கும் உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சேலம் விநாயகா மிஷன் சூப்பர் ஸ்பெசாலிட்ட மருத்துவனை மற்றும் எர்ரபையனஅள்ளி ஊராட்சி இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த மருத்துவ முகாமை இண்டூர் பகுதி வளர்ச்சி மன்ற தலைவரும் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பெ.சாந்தமூர்த்தி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய குழுத்தலைவர் மகேஸ்வரி பெரியசாமி கலந்து கொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டார். ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன், துணைத்தலைவர் ரஞ்சித்குமார் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அறிவழகன், முனியன், சின்னதுரை, பிரபு, ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, இரத்த அழுத்தம், சக்கரை அளவு, ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட சிகிச்சைகளை இலவசமாக மேற்கொண்டனர். இவர்களுக்கு டாக்டர்கள் தயா பிரசாத், சிவா, மகேஸ் உள்ளிட்டோர் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரிகைகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த முகாம் பற்றி மருத்துவமனையின் மேலாளர் ஜெயசிம்மன் கூறியதாவது: முகாமில் மற்றும் எக்கோ, ஈசினி, இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவு உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் சேலம் மருத்துவமனைக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டம் அட்டையை கொண்டு வந்து இலவசமாக மருத்துவம் பார்த்து கொள்ளலாம். அவர்கள் தேவையான அனைத்து உதவிகளையும் மருத்துவமனை நிர்வாகம் செய்யும் என்று அவர் கூறினார்.
Source, Image Courtesy: Kathirnews