தருமபுரியில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!
மாவட்டத்தில் மொத்தம் 7,016 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,729 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. அனைவரும் முககவசம் அணிந்து வந்தாலே தொற்று பரவுவதை தடுக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 10) ஒரே நாளில் 41 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் 7,016 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 6,729 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று 7 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றனர். மொத்தம் 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர், மற்றும் நகராட்சி ஆணையர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து கொரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்.