தருமபுரி மாவட்ட கிராமங்களில் ஆர்வமுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் மக்கள்.!

பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். அவர் உத்தரவுக்கு பின்னர் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-07-21 08:11 GMT

பிரதமர் மோடி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். அவர் உத்தரவுக்கு பின்னர் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட பாலவாடி ஊராட்சியில் 200க்கும் மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.


இந்த முகாமை தருமபுரி பாமக எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் மற்றும் ஒன்றிய சேர்மேன் மகேஸ்வரி பெரியசாமி துவக்கி வைத்தனர். இந்த முகாமை தொடங்கி வைத்து எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பேசியதாவது: தருமபுரி மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். தருமபுரி தொகுதியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 


நகரங்களை விட கிராமத்தில் உள்ள மக்களுக்கு அதிகமான தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன் எனக் கூறினார். இந்த முகாமில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இண்டூர் மருத்துவமனை ஹெல்த் இன்ஸ்பெக்டர் புவனேஷ்வரன் மற்றும் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள், ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News