தருமபுரி மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை.!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தருமபுரி மாவட்டம் எல்லையான காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பெங்களூருவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தருமபுரி மாவட்ட எல்லையை கடந்துதான் செல்ல வேண்டும். இதனால் 24 மணி நேரமும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் எல்லையில் மாவட்ட போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களை அனுப்பி வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் முறையாக இ பாஸ் வைத்துள்ளனரா என போலீசார் ஆய்வு செய்கின்றனர். அதே போன்று முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.