தருமபுரி: கோயில்களில் பக்தர்கள் கூடுவதற்கும், ஒகேனக்கல் ஆற்றில் வழிபாட்டுக்கும் தடை !

கொரோனா தொற்று பரவல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.

Update: 2021-08-01 09:02 GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படாது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "தற்போது ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்பகிடுகிறது. இதன் காரணமாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்கள், தருமபுரி முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வர ஸ்வாமி கோயில், அம்மாபேட்டை சென்னியம்மன் கோயில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உட்பட அனைத்து பிரதான கோயில்களிலும் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

மேலும், தொற்று பரவல் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் கோயில்களில் ஆகம விதிப்படி வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Source: Collector Statement

Image Courtesy: Twiter

Tags:    

Similar News