பாரத் பந்த் அன்று கடைகளை மூட ஃபத்வா விதித்ததா ஜமாத்.?

பாரத் பந்த் அன்று கடைகளை மூட ஃபத்வா விதித்ததா ஜமாத்.?

Update: 2020-12-11 18:30 GMT

விவசாய சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்ற மாநில விவசாயிகள் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மட்டும் எதிர்ப்பது ஏன் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க, கடந்த 8ஆம் தேதி நாடு தழுவிய கடையடைப்பிற்கு பஞ்சாப் விவசாயிகளை ஆதரிக்கும் அமைப்புக்கள் அழைப்பு விடுத்தன‌.

அத்தியாவசிய பொருட்கள் சப்ளையும் நிறுத்தப்பட வேண்டும் என்று பந்த் அழைப்பு விடுத்தவர்கள் கூறிய போதும் அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. போராட்டம் நடக்கும் டெல்லியை ஒட்டிய பகுதிகள் தவிர நாட்டின் பிற பகுதிகளில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது. முக்கியமாக மத்திய அரசின் விவசாய சட்டத்தை ஒட்டிய சீர்திருத்தங்களை முன்னரே மாநில அளவில் செயல்படுத்திவிட்ட தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பந்த்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஜமாத்துகளில் கடை திறக்கக் கூடாது என்று ஃபத்வா விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் கடலூர் லால்பேட்டை ஜமாத்தும் ஒன்று. லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் மசூதியில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்தை எதிர்த்து நடக்கும் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 8-12-2020 அன்று ஊரில் உள்ள அனைத்து கடைகளையும் அடைக்க வேண்டும் என்று ஒருவர் அறிவிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது‌.
 

 

முஸ்லிம்கள் எந்தக் கட்சிக்கு, உறுப்பினருக்கு ஓட்டுப் போட வேண்டும் உள்ளிட்ட அரசியல் விஷயங்களில் ஜமாத்துகள் முடிவெடுப்பது அனைவரும் அறிந்ததே. லால்பேட்டை ஜமாத் முன்னர் வங்கி சேமிப்பு கணக்கு பற்றி வதந்தி பரப்பி மக்களிடையே அச்ச்ததை ஏற்படுத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்தவ அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் இது போல் திட்டமிட்டு மத்திய அரசின் எல்லா செயல்பாடுகளையும் எதிர்த்து வரும் நிலையில், இந்துக்கள் மட்டுமே மதச்சார்பின்மை என்ற பெயரில் முட்டாளாகின்றனர் என்ற விமர்சனம் எழுகிறது. 

Similar News