பாளையங்கோட்டை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் கைதி உயிரிழப்பு.!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் மற்ற கைதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-07 12:53 GMT

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்த சம்பவம் மற்ற கைதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காசிலிங்கநாதபுரம்த்தை சேர்ந்தவர் செல்லத்துரை 75, இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் செல்லத்துரைக்கு உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழந்த சம்பவம் மற்ற கைதிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News