"தி.மு.க கோட்டை " சென்னையில் பச்சிளம் குழந்தையுடன் வெள்ளத்தில் சிக்கிய பெண்!
சென்னையில் மழை நீரில் மாட்டிக்கொண்டு தவித்த குழந்தை பெற்று சில நாட்களே ஆன பெண் மற்றும் அவரது குழந்தையை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னையில் கொட்டித்தீர்த்து வருகிறது. காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பலர் வீடுகளின் மொட்டை மாடியிலும் அரசு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.;
சென்னையில் மழை நீரில் மாட்டிக்கொண்டு தவித்த குழந்தை பெற்று சில நாட்களே ஆன பெண் மற்றும் அவரது குழந்தையை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னையில் கொட்டித்தீர்த்து வருகிறது. காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பலர் வீடுகளின் மொட்டை மாடியிலும் அரசு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை பெரும்பாக்கம், இந்தியா நகர் ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் அதிக கனமழை பெய்து வருவதால் அந்த பகுதியில் இடுப்பளவு தண்ணீர் நின்றுள்ளது. வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியால் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், அந்தப்பகுதியில் குழந்தை பெற்று சில நாட்களே ஆன பெண் தனது கைக்குழந்தையுடன் தண்ணீரில் மாட்டிக்கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சிலர் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் நாற்காலியில் உட்கார வைத்து பெண்ணையும், குழந்தையும் பத்திரமாக பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ள காட்சி வெளியாகியுள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalamurai