புதுக்கோட்டை: காப்பக குழந்தைகளை வயல் வேலைக்கு பயன்படுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்!

புதுக்கோட்டையில் காப்பக குழந்தைகளை வயல் வேலைக்கு பயன்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-10-23 04:32 GMT

புதுக்கோட்டையில் காப்பக குழந்தைகளை வயல் வேலைக்கு பயன்படுத்திய அரசுப் பள்ளி ஆசிரியை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குடுமியான் மலையில் குழந்தைகள் இல்லம் நடத்தி வந்த அரசுப் பள்ளி ஆசிரியை தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி, சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: குடுமியான்மலையில் டாக்டர் அவார்டு தாய், பெண் குழந்தைகள் இல்லம் நடத்தி வந்த குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை ஆ.கலைமகள் என்பவர் இல்லத்தில் தங்கியிருந்த பெண் குழந்தைகளை தனது சொந்த வயல் வேலைக்கு பயன்படுத்தியதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அண்மையில் மூடி சீல் வைத்தார்.

அது பற்றி அன்னவாசல் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 17 பி, விதியின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அவருடைய பதில் திருப்தியாக இல்லாத நிலையில் அக்டோபர் 21 முதல் அரசுப் பணியாளர் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Source: Dinamani

Image Courtesy:Educational Scholarship


Tags:    

Similar News