விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் பணி தொடங்கியது !

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் இன்று முதல் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது.

Update: 2021-09-11 04:35 GMT

நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் இன்று முதல் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பல்வேறு மாவட்டங்களில் வைக்கப்பட்டு இந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அதன்படி புதுக்கோட்டையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த 5க்கும் மேற்பட்ட சிலைகள் புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் இந்து முன்னணி சார்பில் 25க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. வேளாங்கண்ணி அருகே அமைந்துள்ள வல்லப கணபதி ஆலயத்தில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 6 அடி உயர விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றங்கரையில் கரைக்கப்படுகிறது.

இதே போன்று மற்ற மாவட்டங்களில் ஏரி, குளம் மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கும் முயற்சியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News