தீபாவளியை முன்னிட்டு வசூல் சாதனை: ரூ.443 கோடிக்கு மது விற்று சாதித்த தமிழக அரசு!

தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.443 கோடிக்கு விற்று சாதித்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த விற்பனை தொகை சற்று குறைவுதான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Update: 2021-11-05 11:48 GMT

தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் மதுபானங்கள் ரூ.443 கோடிக்கு விற்று சாதித்துள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த விற்பனை தொகை சற்று குறைவுதான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மதுபானங்களின் விற்பனையானது சாதாரண நாட்களை காட்டிலும் மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் புத்தாண்டு மற்றும் தீபாவளியின்போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை படுஜோராக இருக்கும். பண்டிகையை கொண்டாடுவதை விட இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் டாஸ்மாக் கடையை நோக்கி செல்கின்றனர். கடந்த ஆண்டிலும் கொரோனாவை மறந்து டாஸ்மாக் கடைகளில் கூட்டம் சென்றதை பார்த்தோம். தீபாவளி பண்டிகை என்பதால் 4 நாட்களுக்கு குறையாமல் விடுமுறை கிடைக்கும். இதனால் மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் மிதந்து கிடக்கின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை சேல்ஸ் பற்றி டாஸ்மாக் நிர்வாகிகள் கூறும்போது: தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 3ம் தேதி மாலை முதல் விற்பனை மிகவும் அருமையாக இருந்தது. அன்றை நாளும், தீபாவளியான நேற்று (நவம்பர் 4) மொத்தம் ரூ.443.03 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டுடம் ஒப்பிடுகையில் விற்பனை குறைவாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு இரண்டு நாட்களில் ரூ.467.69 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தென்மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மதுப்பிரியர்களின் வரத்து மிகவும் குறைவு. இதன் காரணமாக விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்றார்.

மண்டல வாரியாக விற்பனை பார்க்கும்போது, மதுரையில்தான் மிக அதிகமாக மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.98.89 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.90.95 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.79.84 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.83.46 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.90.89 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Hindu


Tags:    

Similar News