ராமநாதபுரத்தில் ஆ.ராசா உருவ பொம்மையை எரித்த அ.தி.மு.கவினர் - காய்கறி, கற்களால் தாக்கிய தி.மு.கவினர்.!

ராமநாதபுரத்தில் ஆ.ராசா உருவ பொம்மையை எரித்த அ.தி.மு.கவினர் - காய்கறி, கற்களால் தாக்கிய தி.மு.கவினர்.!

Update: 2020-12-09 07:10 GMT

தமிழக அரசியல் களம் வார்த்தை விவாதங்களை தாண்டி கைகலப்பு தகராறாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று ராமநாதபுரத்தில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற அ.தி.மு.க தரப்புக்கும் தி.மு.க தரப்புக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் அ.தி.மு.க தலைவர்களை அவதூறாகப் பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு அ.தி.மு.கவினர் ஒன்று கூடினர். அங்கு ஆ.ராசாவின் உருவ பொம்மையையும் அவர்கள் எரிக்க முயன்றனர். இதைனை தடுத்து நிறுத்த போலீஸார் முயன்றனர். ஆனால், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும்போதே சிலர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்தனர். 

இதனையறிந்த தி.மு.கவினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் அ.தி.மு.கவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். திடீரென அந்தப் பகுதியிலிருந்த காய்கறிக் கடையில் இருந்த காய்கறிகளை எடுத்து அ.தி.மு.கவினரை நோக்கி வீசினர். மேலும், அவர்களை நோக்கி செருப்புகளையும் வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.கவினர் தி.மு.க-வினரை நோக்கிக் கடுமையான சொற்களால் வசைபாடியதுடன், பதிலுக்கு கற்களை வீசினர். இதனால் அங்கு திடீரென பதற்றம் நிலவியது. 

தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் வழக்கொழிந்து இப்படி திராவிட கட்சிகளால் அடிதடி அரசியல் நடைபெறும் நிலை உள்ளதை நினைத்து மக்கள் தலையில் அடித்துக்கொள்கின்றனர்.

Similar News