தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. ஏற்பட்ட உட்கட்சி பூசல்.. தி.மு.க.விற்கு எதிராக போஸ்டர்!
தமிழக அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றத்தின் காரணமாக உள் கட்சியினர் இடையே பூசல் ஏற்பட்டு இருக்கிறது.
திமுகவின் மூத்த தலைவர் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் தான் பூண்டி கலைவாணர். இவர் மறைந்த முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்து நீண்ட நெடிய காலமாக திமுகவில் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தமிழக அமைச்சர் அவையில் மாற்றம் ஏற்படும் பொழுது, தனக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என்று பூண்டி கலைவாணரின் ஆதரவாளர்கள் வெகுவாக நம்பி இருந்தார்கள்.ஆனால் அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
பூண்டி கலைவானின் ஆதரவாளர்கள் தி.மு.க.விற்கு எதிராக போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை, தங்கம் தென்னரசுக்கு நீதித்துறை மற்றும் மனித வள மேம்பாட்டு துறை, மனோ தங்கராஜ்க்கு பால்வளத்துறை, டிஆர்பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. நீண்ட காலமாக திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் பூண்டி கலைவாணர் அவர்களுக்கு இடம் அளிக்காததால் அவருடைய ஆதரவாளர்கள் திமுகவிற்கு எதிராக போஸ்டர் ஒட்டி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், டி.ஆர். பாலுவின் மகனும் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜாவிற்கு அமைச்சரவையில் இடம் கிடைத்து இருக்கிறது. திமுகவை கண்டித்து திமுக சார்பில் போஸ்டர் ஒட்டி இருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பேச்சு பொருளாக மாறி இருக்கிறது.
Input & Image courtesy: Mediyaan News